இஸ்கான் சார்பில் ஜெகந்நாதர் ரத யாத்திரை!
ADDED :3854 days ago
புதுச்சேரி: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில், ஜெகந்நாதர் ரத யாத்திரை நேற்று நடந்தது. இஸ்கான் அமைப்பு சார்பில், காந்தி வீதியில் உள்ள, வரதராஜப் பெருமாள் கோவில் எதிரே துவங்கிய ஜெகந்நாதர் ரத யாத்திரையை, அமைச்சர் பன்னீர்செல்வம், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர். இஸ்கான் தென் இந்திய மண்டல சேர்மன் சத்திய கோபிநாத் தாஸ், கோயம்புத்துார் இஸ்கான் தலைவர் பக்தி விக்ன நசயக நரசிம்மசாமி, சென்னை தலைவர் சுபித்ரா கிருஷ்ணதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெகந்நாதர் ரதயாத்திரை காந்தி வீதி, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்சி வீதி, அண்ணா சாலை, அஜந்தா சிக்னல் வழியாக முத்தியால்பேட்டை சுபலட்சுமி மகாலில் முடிந்தது. ரத யாத்திரையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.