கோதண்ட ராமசுவாமி கோயில் கொடியேற்றம்!
ADDED :3853 days ago
ராஜபாளையம் : ராஜபாளையம் கோதண்டராமசுவாமி கோயில் பிரம்மோற்சவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி கோயில் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 10.20 மணிக்கு கொடியேற்றம், சிறப்பு தீபாரதனை நடந்தன. ராமசுவாமி, சீதாதேவி, பூதேவி, அனுமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். மார்ச் 28 வரை நடக்க உள்ள விழாவில், சிம்மம், அனுமந்த், சேஷம், கருடன், கஜம், குதிரை வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது. மார்ச் 25 காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணம் ,மார்ச் 27 ரதோத்ஸவம், 28ல் சப்ர வாகனத்தில் வீதி உலா நடைபெறும். மார்ச் 28பிற்பகல் 4 மணிக்கு ராமநவமி சுவாமி புறப்பாடு நடைபெறும். கொடியேற்ற விழாவில் தர்ம கர்த்தா ஸ்ரீனிவாச ராஜா, அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் கலந்துகொண்டனர்.