ஆனைமலை சிவாலயங்களில் சோமவார பூஜை!
ADDED :3854 days ago
ஆனைமலை : ஆனைமலை சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆனைமலையில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு இளநீர், சந்தனம், மஞ்சள், பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட, 16 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமிக்கு உகந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. ரமணமுதலி புதூரில் உள்ள மண்கண்டீஸ்வரர் கோவில், பெத்தநாயக்கனூர் பட்டீஸ்வரர் கோவில், கோட்டூர் ஆதிசங்கரர் கோவில், மேற்குபார்த்த சிவன் கோவிலான சிங்காநல்லூர் சித்தாண்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.