உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் 26ல் கும்பாபிஷேக நிறைவு விழா

அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் 26ல் கும்பாபிஷேக நிறைவு விழா

ராசிபுரம்: ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு பெருவிழா, வரும் 26ம் தேதி நடக்கிறது. ராசிபுரம், கச்சேரி தெருவில் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கோவில் மூலவராக அபயஹஸ்த ஆஞ்சநேயர், ஒரே சன்னதியில் நவக்கிரக ஆஞ்சயேர்கள் மற்றும் சால கோபுரம், மூலவர் விமானம், கோவிலின் வெளிபுறத்தில், 16 அடி ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு பெருவிழா, ஜூன் 26ம் தேதி நடக்கிறது. அன்று காலை 7.30 மணியளவில் பூர்வாங்க பூஜைகளும், அதை தொடர்ந்து பஞ்சமுகி அனுமந் மகாமந்திர யாகம் மற்றும் ஸ்ரீராம பாதுகா மந்திர மகா யாகமும் நடக்க உள்ளது. பின், அபயஹஸ்த ஆஞ்சநேயர், நவ மாருதி ஆஞ்சநேயர்களுக்கும் பல்வேறு வாசனை திரவியங்கள், பால், இளநீர், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் கனி வகைகள், உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. பின், ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !