தட்டாஞ்சாவடி அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :3853 days ago
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. தட்டாஞ்சாவடி, சுப்பையா நகரில் உள்ள அ ங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நான்காம் ஆண்டு மயானக் கொள்ளை உற்சவம் நடந்து வருகிறது. விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. காலை 8.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு, மகா அபிஷேகம் மற்றும் குங்கும அபிஷேகம் நடந்தது. மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில், திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனர். இரவு 9.00 மணிக்கு, அம்மன் வீதியுலா நடந்தது.