திருப்புவனம் பங்குனி விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
ADDED :3900 days ago
திருப்புவனம்:திருப்புவனம் புதூர் ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 12 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்துநாட்கள் நடந்த திருவிழாவின் நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி வீதிகளில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ,சிறப்பு பூஜைகள் நடந்தன. குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் அம்மனுக்கு பொம்மை செய்து நேர்த்திகடன் செலுத்தினர். ராஜகோபுர பணிகள் நடைபெறுவதால் கோயிலில் பக்தர்கள் சென்று வருவதில் நெருக்கடி எற்பட்டது. மானாமதுரை டி.எஸ்.பி., புருசோத்தமன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.