கோயிலில் விழுந்தால் விலகும்!
ADDED :4252 days ago
கோயிலில் உள்ள கொடிமரம் முன்பு விழுந்து வணங்குவதை தண்டம் சமர்ப்பித்தல் என்பர். தண்டம் என்றால் கம்பு . கையில் இருக்கும் கம்பை கீழே போட்டால் தடாலென விழும். அதுபோல பக்தனும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவதால் இந்தப்பெயர் ஏற்பட்டது. ஒன்றுக்கும் உதவாத பொருளை, இது தண்டம் என்பர். மனித உடலும் தண்டமானது தான். இந்த தண்டப்பொருள் எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக்கொள் என்று வேண்டுவதே இந்த வழிபாட்டின் நோக்கம்.