ராமநவமி வழிபாடு!
ADDED :4249 days ago
பங்குனியில் நவமி திதியும், புனர்பூசம் நட்சத்திரமும் இணையும் நாளில் கொண்டாடப்படுவது ராம நவமி. இந்நாளில், பட்டாபிஷேக கோல ராமர் படத்தை பூஜையறையில் வைத்து, பொங்கல், பருப்பு வடை, நீர்மோர், பானகம், பாயாசம், வெள்ளரிக்காய் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். ராமாயணம் படிக்க வேண்டும். பிரிந்த தம்பதி ஒன்று சேர, இந்நாளில் சுந்தர காண்டம் படிக்கலாம்.