பட்டீஸ்வரர் கோவில் தேரோட்ட விழா: கொடியேற்றத்துடன் துவங்கியது!
பேரூர் : கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, கடவுள் அருள் பெற்றனர். கோவையில் பழமையான கோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலும் ஒன்று.இக்கோவிலின் பங்குனி உத்திரத்தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்துக்கு முன்னதாக, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கோவிலை சுற்றி வந்தனர். காலை, 9:00 மணியளவில், திருவிழா கொடி, கம்பத்தில் ஏற்றப்பட்டது.தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சியளித்தார். விழா நிறைவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், ஆறு நாட்களுக்கும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை செய்யப்பட்டு, சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி யளிப்பார்.