உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்காக சந்தனம் அரைக்கும் நிகழ்ச்சி துவங்கியது!

நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்காக சந்தனம் அரைக்கும் நிகழ்ச்சி துவங்கியது!

நாகப்பட்டினம்: நாகூர் தர்கா கந்தூரி விழாவில், சந்தனம் பூசும் விழாவிற்காக, சந்தனம் அரைக்கும் நிகழ்ச்சி துவங்கியது. நாகை அடுத்த நாகூரில், பழமையான ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவின், 458ம் ஆண்டு கந்தூரி விழா, கடந்த, 21ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 14 நாட்களாக நடந்து வரும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும், 31ம் தேதி அதிகாலை, சந்தனம் பூசுதல் விழா நடக்கிறது. இதற்காக, கடந்த, 2012ம் ஆண்டு முதல், தமிழக அரசு, தர்கா நிர்வாகத்திற்கு, இலவசமாக சந்தனக் கட்டைகளை வழங்கி வருகிறது. நடப்பாண்டு, 5.96 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 கிலோ உயர் ரக சந்தனக் கட்டைகளை, அரசு வழங்கியுள்ளது. இந்த சந்தன கட்டைகளை, பன்னீரில் ஊற வைத்து, ஜவ்வாது மற்றும் வாசனை திரவியங்கள் சேர்த்து அரைக்கப்படும். தர்காவில் சந்தனக் கட்டைகள் அரைக்கும் நிகழ்ச்சியை, நேற்று முன்தினம் மாலை, தர்கா அறங்காவலர் சுல்தான் கபீர் சாகிப் துவா துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தர்காவின் நிர்வாக அறங்காவலர் ஷேக் ஹசன் சாகிப் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !