உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு தட்ஷிணா மூர்த்தி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

குரு தட்ஷிணா மூர்த்தி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

மதுரை : மதுரை டோக்நகர் சின்மய மீனாட்சி தியான மண்டபத்தில் உள்ள குரு தட்ஷிணாமூர்த்தி சுவாமி கோயிலின் 12வது கும்பாபிஷேக விழா மற்றும் சிறப்பு ேஹாமங்கள் நாளை (மார்ச் 27) காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் தீபாராதனை நடக்கின்றன. நாளை காலை 8 மணி முதல் 12.30 மணி வரை கோ பூஜை, கணபதி ேஹாமத்துடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.மாலை 4 மணிக்கு தட்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை மற்றும் பிரசாதம் விநியோக நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மேலும் நாளை மாலை 6.30 மணிக்கு பிச்சம்மாள் சுப்பிரமணியன் மற்றும் சின்மய தேவி குழுவினரின் தேவார இன்னிசை பாடல் மற்றும் பஜனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !