உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவிலில் பங்குனிதேர் திருவிழா இன்று துவக்கம்

ஸ்ரீரங்கம் கோவிலில் பங்குனிதேர் திருவிழா இன்று துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பங்குனி தேர்திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்கி வரும், 5ம் தேதி வரை நடக்கிறது. தேரோட்டம் ஏப்ரல், 4ம் தேதி நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பங்குனி தேர்திருவிழா இன்று காலை, 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை, (27ம் தேதி) நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பாடு நடக்கிறது. மூன்றாம் நாள் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடும், கண்ணாடி அறை சேர்தலும் நடக்கிறது.நான்காம் நாள் கருட சேவை நடக்கிறது. ஆறாம்நாள் நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து பல்லக்கில் புறப்பாடு, வழி நடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மஹாஜன மண்டபம் எழுந்தருள்கிறார். ஏப்ரல், 1ம் தேதி, நம் பெருமாள் நெல்லளவு கண்டருளி சித்திரை வீதிகள் வலம் வருகிறார். 2ம் தேதி, குதிரை வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. 3ம் தேதி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் தாயார் சேர்த்தி சேவை நடக்கிறது.முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம், 4ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 5ம் தேதி, மூலஸ்தானம் சேர்தல் நடக்கிறது.தேர் திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !