உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரியம்மன் வீதி உலா துவக்கம்: விண்ணை தொட்ட "மாரியம்மா கோஷம்!

பண்ணாரியம்மன் வீதி உலா துவக்கம்: விண்ணை தொட்ட "மாரியம்மா கோஷம்!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் கிராமத்தில் பண்ணாரி மாரியம்மன், நேற்று காலை முதல் சப்பரத்தில் வீதி உலா சென்றது. அப்போது பக்தர்கள் "மாரியம்மா, மாரியம்மா என கோஷமிட்டு வணங்கினார்.சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இக்கோவிலில், கடந்த, 23ம் தேதி இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன், இந்த ஆண்டுக்கான குண்டம் விழா துவங்கியது.நேற்று முன்தினம் இரவு, 10 மணிக்கு பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் புறப்பட்டு, சிக்கரசம்பாளையத்துக்கு நேற்று காலை வந்தது.சிக்கரம்பாளையம் பகுதியில் உள்ள கிராமங்களில், நேற்று முன்தினம் முழுவதும் வீதி உலா சென்றது. அப்போது, பெண்கள் கையில் வேப்பிலையுடன் "மாரியம்மா, மாரியம்மா என கோஷமிட்டு, சப்பரத்தில் வந்த மாரியம்மனுக்கு, குடத்தில் தண்ணீர் ஊற்றியும் தேங்காய், பழம் வைத்து வணங்கினர்.பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் தரையில் படுத்து வணங்கினர். மாலையில், சிக்கரம்பாளையத்தில் இருந்து புறப்பட்டு புதூர் சென்றடைந்தது. இன்று புதூர் பகுதியில் வீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !