மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3846 days ago
மண்ணாடிமங்கலம் : மண்ணாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் யாகசாலை பூஜை மார்ச் 23ல் துவங்கியது. கும்பாபிஷேகத்திற்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு, நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஊழியர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், நாகராஜன் செய்திருந்தனர்.