அரக்காசு அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :3846 days ago
சாயல்குடி : சாயல்குடியில் அரக்காசு அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு 2 நாள் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9 மணி முதல் பால், இளநீர், நெய் அபிஷேகம் நடந்தது. காலை 10 மணியளவில் கலசத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.