தேவகோட்டை மாரியம்மன் கோயில் விழா!
ADDED :3846 days ago
தேவகோட்டை : தேவகோட்டை, சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா 17ம் தேதி காப்பு கட்டுடன் துவங்கின. அம்மன் காமாட்சி, கைலாச நாதர், சரஸ்வதி, விஜயலட்சுமி, கமலாம்பிகை, மீனாட்சி,பகவதி அலங்காரத்தில் காட்சி அளித்தார். நேற்று பக்தர்கள் பால்குடம், பறவைகாவடி எடுத்து நேர்த்தி செலுத்தினர். மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.