மாணிக்க வினாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :3846 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த பெரியக்குத்தகை, சரவணபுரம் மாணிக்க வினாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் நடந்தது. காலை, 10.30 மணிக்கு, சாலை பூஜைகள் நிறைவு பெற்று, கடம் புறப்பாடு நிகழ்ந்தது. ஆனந்த், தண்டபாணி ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோவில், கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து, மூல விக்ரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் நடந்ததுவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.