உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்ணெய்நல்லூர் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவெண்ணெய்நல்லூர் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே அய்யனார் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் பூரணி, பொற்கலை சமேத அய்யனார் மற்றும் வீரன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 24ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிராகணம் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு பூர்ணாஹூதியும், காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கும்பாபிஷேகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !