அகத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது!
ADDED :3904 days ago
பொன்னேரி: பொன்னேரி, ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 24ம் தேதி, கிராம தேவதை பூஜையும், நேற்று முன்தினம், விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதியுலா மற்றும் பூர்வாங்க பூஜைகளும் நடந்தன. கொடியேற்றம் முடிந்து, காலை 10:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், பஞ்ச மூர்த்திகள் உலா வந்து, பக்தர்களுக்கு ள்பாலித்தனர். நூறு ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இவ்விழாவினை காண, பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமியை வழிபட்டு சென்றனர். இதேபோல், அரப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கஜலட்சுமி, 19, கடந்த 22ம் தேதி மாலை, கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. மூன்று பெண்கள் மாயமானது குறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.