சோழவந்தான் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா!
ADDED :3904 days ago
சோழவந்தான் : சோழவந்தான் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 23ல் துவங்கியது.மார்ச் 29ல் காலை 7.35 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்தல், 30ல் பூச்சொரிதல் விழா, 31ல் சக்தி கரகம் எடுத்தல்,பொங்கல் படைத்தல் நடக்கிறது. ஏப்.1ல் பால்குடம், அக்னிச்சட்டி, மாவிளக்கு நேர்த்திக்கடன் எடுத்தல், 2ல் முளைப்பாரி எடுத்தல், அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் முருகேசன், ஜவஹர், சண்முகராஜா, அண்ணாமுருகன், குணசேகரன் செய்து உள்ளனர்.