ஆதி திருவரங்கப் பெருமாள் புஷ்ப பல்லக்கில் வீதியுலா!
ADDED :3844 days ago
சிதம்பரம்: சிதம்பரம் மேலவீதி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சீதா ராமர் திருக்கல்யாணம் மற்றும் ஆதி திருவரங்கப் பெருமாள் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. அதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ஆதி திருவரங்கப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை கோவில் வளா கம் வாசவி மகாலில் சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சன்னதியில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பள்ளிக்கொண்ட நிலையில் ஆதி திருவரங்கப் பெருமாள் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.