ஓசூரம்மன் கோவிலில் கஜ பூஜை!
ADDED :3844 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஓசூரம்மன் கோவிலில் கஜ பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் ஓசூரம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. தினமும் சிறப்பு அபிஷேகமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு கோ பூஜை மற்றும் கஜ பூஜை நடந்தது. யானையை ஊர்வலமாக அழைத்து சென்றனர். நவகிரகம், துர்கா, ருத்ரா ஹோமங்கள் நடந்தது. கஜ (யானை) பூஜையை காண ஏராளமான மக்கள் கூடினர். இரவு அம்மன் நாக வாகனத்தில் வீதியுலா நடைபெற்றனர்.