கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்!
ADDED :3845 days ago
புவனகிரி: புவனகிரி செல்வ கொளஞ்சியப்பர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. புவனகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் காவடி எடுத்தல், திருத்தேர் பவனி வரும் ஏப்ரல் 3ம் தேதி நடக்கிறது.