பழநியில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருப்பு!
ADDED :3845 days ago
பழநி :பழநி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று ஞாயிறுவிடுமுறை, பங்குனிஉத்திரவிழா போன்றவற்றினால் பழநி கோயிலில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. இதனால் ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கு சென்றனர். ஈரோடு, திருப்பூர், தாராபுரம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தகாவடிகளுடன் குவிந்தனர். அவர்கள் தனிவரிசையில் மூலவருக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர். பொதுதரிசன வழியில் சென்ற பக்தர்கள் வெளிப்பிரகாரத்தில் 4 மணி நேரம் காத்திருந்து மூலவர் தண்டாயுபாணியை தரிசனம் செய்தனர்.