உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவிலில்ஏப். 14ல் சித்திரை தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்ஏப். 14ல் சித்திரை தேரோட்டம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வரும், 5ம் தேதி துவங்குகிறது. சித்திரை தேரோட்டம், ஏப்ரல், 14ம் தேதி நடக்கிறது.திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, தினமும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசித்து செல்கின்றனர். திருவிழா நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா, மாசி மாத கடைசி ஞாயிறு அன்று துவங்கியது. நேற்று, நான்காவது வார பூச்சொரிதல் விழா நடந்தது. சித்திரை தேர் திருவிழா வரை, வாரந்தாறும் ஞாயிற்றுக்கிழமைகளில், பூச்சொரிதல் விழா நடைபெறும்.இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும், 5ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, அன்று காலை, 7 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. இரவு, 7.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. திருவிழா துவங்கிய அடுத்தடுத்த நாட்களில் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம், ஆகிய வாகனங்களில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற உள்ளது.சித்திரை தேரோட்டம் ஏப்ரல், 14ம் தேதி, காலை, 10.30 மணிக்கு நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !