விழுப்புரம் மாரியம்மன் கோவிலில் ராமநவமி விழா
ADDED :3846 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கோவிந்தராஜ பெருமாள் கோவில் வீதியில் ஸ்ரீ ராமநவமி விழா நடந்தது. விழுப்புரம் கோவிந்தராஜ பெருமாள் கோவில் வீதி மாரியம்மன் கோவிலில் பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ராமருக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ராமரின் பெருமைகள் மற்றும் பஜனை பாடல்கள் நடந்தது. இதில் பங்கேற்ற சிறுவர்கள் மற்றும் பக்தர்களுக்கு பானகம் வழங்கினர். பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், பொது செயலாளர் ஜெயக்குமார், மாநில பொதுக்குழு சூரியநாராயணன், நகர தலைவர் சக்திவேல், இந்து முன்னனி ராமு, நிர்வாகிகள் ரகு, ஜீவா, பழனி கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட துணை தலைவர் சுகுமார் செய்திருந்தார்.