குருத்தோலை ஞாயிறு: கிறிஸ்தவர்கள் பவனி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. ஏசுவை சிலுவையில் அறையப்படும் முன், பாஸ்கா விழாவில் பங்கேற்க பெத்லஹேம் நகரில் நுழைந்த ஏசுவை மக்கள் கைகளில் ஆலிவ் இலை ஏந்தி வரவேற்றனர். இந்நாளை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடந்தது. ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் பங்கு தந்தை ராஜமாணிக்கம், ராமேஸ்வரம் வேர்க்கோடு அந்தோணியார் சர்ச்சில் பங்கு தந்தை சகாயராஜ், மண்டபம் அருளானந்தர் சர்ச்சில் பங்கு தந்தை அருள் சந்தியாகு, தங்கச்சிமடம் சவேரியார் சர்ச்சில் பங்கு தந்தை ஜேம்ஸ் அந்துவன், அன்னை தெரசாள் சர்ச்சில் பங்கு தந்தை ஜெகன் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
* பரமக்குடியில் நடந்த குருந்தோலை விழாவில் பங்குத்தந்தை செபஸ்தியான் தலைமை வகித்தார். பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் இருந்து அலங்காரமாதா சர்ச் வளாகம் வரை பங்கு இறைமக்கள் குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
* ஆர்.எஸ்.மங்கலம் செங்குடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழாவில் செங்குடி பங்கு பாதிரியார் சாமுஇதயன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். அதேபோன்று ஆர்.எஸ்.மங்கலம் சி.எஸ்.ஐ., சர்ச்சிலும் குருத்தோலை ஞாயிறு விழா நடந்தது.