மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூடத்தின் திருவாசகம் முற்றோதல்!
ADDED :3846 days ago
புதுச்சேரி: மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூடத்தின் சார்பில் எட்டாம் ஆண்டு சிறப்பு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளந்தாங்கி அய்யனார் கோவிலில் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு மூலவர் அபிஷேகமும், 8.30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. இதன் தொடர்ச்சியாக திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அனைத்து சிவனடியார் திருக்கூடம், சென்னை சிவனடியார் திருக்கூடம், வேப்பூர் சிவ ஆனந்தக்குடில் அடியார்கள் திருக்கூடம், ஆரணி சிவனடியார் திருக்கூடம், பெண்ணாகடம் சிவனடியார் திருக்கூடத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.