உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெய்கண்டார் கோவிலில் மாதாந்திர சிறப்பு வழிபாடு

மெய்கண்டார் கோவிலில் மாதாந்திர சிறப்பு வழிபாடு

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் மாதாந்திர சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி காலை 9:00 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிவஞானம் போதம் குறித்து பேராசிரியர் சிங்காரவேலன் பேசினார். அம்பலவாண தம்பிரான்சுவாமிகள் அருளாசி வழங்கினார். மதியம் 1:00 மணிக்கு மகேஸ்வரபூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி சைவசித்தாந்த பயிற்சி மையம் சார்பில் நடந்த ஏற்பாடுகளை சைவ சித்தாந்த பயிற்சி மைய அமைப்பாளர்கள் தமிழழகன், பாபு, நமச்சிவாயம், முத்தையன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !