திருத்துறைப்பூண்டி ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :3847 days ago
திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ராமர் கோவிலில், ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை, 10.30 மணிக்கு ராமபிரானுக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தீபாராதனைக்குப் பின், அன்னதானமும், மாலை, 5 மணிக்கு சீதா கல்யான வைபவம் நடைபெற்றது. இரவு, 9 மணிக்கு, ஸ்வாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி நாயுடு மஹாஜன சங்கத்தினர் செய்தனர்.