ஓவியர் சில்பி வரைந்த மயிலாப்பூர் கோவில் ஓவியங்கள்!
ADDED :3847 days ago
ஓவியர் சில்பியை அறியாதவர்களே கிடையாது எனலாம். தமது கைவண்ணத்தால், தமிழக கோவில்கள் மட்டுமின்றி, வடமாநில கோவில்களையும் பிரபலப்படுத்தியவர் அவர். அவரது ஓவியங்களில் இடம் பெற்றிருக்கும் கோவில்களைப் பார்த்தால், அந்த கோவில்களுக்கு நேரில் சென்று வர வேண்டும் என்ற எண்ணம் எழும். அந்தளவுக்கு, அவரது ஓவியங்கள், பார்ப்போரின் நெஞ்சத்தில் பதிந்து விடும்.அவர், கற்பகாம்பாள் மூலவரை வரைந்திருக்கிறார். ஏனோ, கபாலீஸ்வரரை விட்டு விட்டார். அதேநேரம், கோவிலை இரு கோணங்களில் பார்த்து வரைந்துள்ளார். அவர் வரைந்த காலத்தில், கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி தென்னஞ்சோலைகளாகவே இருந்தன. இன்று, கட்டடக் காடாக மாறிவிட்டது. ஓவியத்தில் பார்த்தாவது மன நிறைவு கொள்ளலாம்.அவையே இங்கு இடம் பெற்றுள்ளன. - நமது நிருபர் -