கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
வாழப்பாடி :வாழப்பாடி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக இரண்டாமாண்டு விழா நடந்தது.வாழப்பாடி, ஆர்ய வைஷ்ய ஜனங்கள் சார்பில், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், கடந்தாண்டு, ஒரு கோடி ரூபாய் செலவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக இரண்டாமாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை 6 மணிக்கு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு, 108 குட பால் அபிஷேகமும், சிறப்பு பூஜை வழிபாடும் நடந்தது.தொடர்ந்து, புஷ்ப பல்லக்கில் உற்சவமூர்த்தி திருவீதி உலா நிகழ்ச்சியும், நான்கு தலைமுறை பெண்கள் பங்கேற்ற இறைவழிபாட்டு துதிப்பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. நிறைவாக, "இன்றைய தலைமுறையின் பார்வையில் ஆண்டவன் என்ற தலைப்பில், டாக்டர் நாகராஜனின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.ரத்தினக்கற்கள் அலங்காரத்தில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேலம் வைஸ்யா கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், ஏ.வி.ஆர்., சொர்ணமஹால் சுதர்சனம், ஊர்வசி சீனிவாசகுப்தா, கோவை சுரேஷ்குமார் மற்றும் வாழப்பாடி ஆர்ய வைஸ்ய மஹாஜன சபா, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் டிரஸ்ட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.