உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா சந்தனக்காப்பு!

பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா சந்தனக்காப்பு!

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சந்திரநாயகபுரம் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சந்தனக்காப்பு அபிஷேகம்  நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த ரயிலடி (சந்திரநாயகபுரம்) பாலமுருகன் கோவிலில்  பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றம்  மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தினமும் அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. நேற்று மதியம்  12:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அரு ள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய விழாவான பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 3ம் தேதி  நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள்  செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !