உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கபுரம் கிராமத்தில் திருத்தேர் வெள்ளோட்டம்!

கெங்கபுரம் கிராமத்தில் திருத்தேர் வெள்ளோட்டம்!

அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம் கெங்கபுரத்தில்  திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.  கெங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள  பழமைவாய்ந்த பெருந்தேவி உடனுறை ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில்  கடந்த 31 ஆண்டு காலமாக தேர் பழுதடைந்ததால், திருத்தேர்  ஊர்வலம் தடைபட்டிருந்தது. இந்து சமய அறநிலைய துறை சார்பில் 22 லட்சம் ரூபாயும், பொதுமக்களின் பங்களிப்பாக 18 லட்சம் ரூபாயை  கொண்டு கடந்தாண்டில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய தேர் அமைக்கும் பணி துவங்கியது. ஆரணி தொகுதி எம்.பி., ஏழுமலை தலைமை தா ங்கி, வடம் பிடித்து திருத்தேர் வெள்ளோட்டத்தை நேற்று காலை துவக்கி வைத்தார். முன்னதாக பெருந்தேவி உடனுறை ஸ்ரீவரதராஜ பெருமாள்  சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி தமிழ்வாணன்  முன்னிலை வகித் தனர். மாவட்ட கவுன்சிலர் மோகன், அறநிலைய துறை ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சரவணன், வருவாய் ஆய்வாளர் ராதாகிரு ஷ்ணன், உதவி பொறியாளர் மணி,  மேல்மலையனூர் கோவில் மேலா ளர்கள் முனியப்பன், மணி, பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பத்குமார்,  ராஜேந்திரன், அஞ்சாபுலி, பழனி, மணவாளன் , துணை தலைவர் ஆறுமுகம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !