உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில் உறியடி திருவிழா!

ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில் உறியடி திருவிழா!

திருவள்ளூர்: திருவள்ளூர், ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில், ராமநவமியை முன்னிட்டு, நேற்று முன்தினம், உறியடி திருவிழா நடந்தது. திரு வள்ளூர் ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில், ராமநவமி உற்சவம், கடந்த 25ம் தேதி துவங்கியது. தினசரி அபிஷேகம், அலங்காரம் மற்றும் பஜனை  நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ராம கீர்த்தனைகள் மற்றும் சத்குரு சாயிநாதர் சிறப்பு பஜனைகள் நடந்தன. பின்,  மாலை, சாயி சகஸ்ரநாம பாராயணமும்; இரவு, ஆனந்த சாய்ராம் திருப்பல்லக்கில் பவனியும் நடந்தது. விழாவின் கடைசி நாளான, நேற்று  முன்தினம், வீரராகவ ராமானுஜதாசர்கள் பக்த பஜனை சபாவின்  அனுமன் பஜனை நடந்தது.  பின், இரவு 7:00 மணிக்கு உறியடி விழா நடந்தது.  இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !