சூலுார் பெருமாள் கோவில்களில் ராம நவமி விழா
ADDED :3849 days ago
சூலுார் : சூலுார் சுற்றுவட்டாரத்தில் பெருமாள் கோவில்களில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. சூலுார் வேங்கடநாத பெருமாள் கோவிலில் ராம நவமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பஜனை நடந்தது. பள்ளபாளையம் ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சிறப்பு ஆரத்தி நடந்தது. சூலுார் ஒன்றிய விஸ்வ இந்து பரிஷத் சார்பில், ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. ஜூன் மாதம் முதல் வீடு வீடாக துளசி செடி கொடுப்பது என, முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும், ஆல், அரசு, மா, வேம்பு உள்ளிட்ட மரங்கன்றுகளை நட முடிவானது. விழாவில் கோட்ட கொள்கை பரப்பு செயலாளர் வக்கீல் விஜயகுமார், துணைத்தலைவர் கருப்புசாமி, செயலாளர் சதீஷ்குமார், பட்டணம் ராமச்சந்திரன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.