அங்காளம்மன் கோவில் தேர்த் திருவிழா
ADDED :3849 days ago
திருபுவனை: மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. தேர் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடந்தது. காலை 8.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின், 12.30 மணிக்கு மயானக் கொள்ளை விழா நடந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. காலை 8.00 மணிக்கு அம்மன் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முதல்வர் ரங்கசாமி தேரை வடம்பிடித்து துவக்கி வைத்தார். அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.