உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவில் திருவிழா உடுமலையில் கோலாகலம்!

அம்மன் கோவில் திருவிழா உடுமலையில் கோலாகலம்!

உடுமலை : மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியுள்ளதை அடுத்து, உடுமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது; கம்பம் நடும் நிகழ்ச்சி, இன்று நடக்கிறது. உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 24ல் துவங்கியது; வரும் 9ல் நிறைவடைகிறது. கம்பம் நடுதல் நிகழ்ச்சி, இன்று மாலை நடக்கிறது. இதனால், பக்தர்கள் கூட்டம் இன்று முதலே அதிகரித்துகாணப்படும்.திருவிழாவையொட்டி, உடுமலை குட்டை திடலில், ஆண்டுதோறும் பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை விளையாட்டு சாதனங்கள் அமைக்க ஏலம் நடத்தப்படும். நடப்பாண்டில், பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர், 27 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய்க்கு, ஏலம் எடுக்கப்பட்டது.இன்று முதல் திருவிழா களை கட்டும் என்பதால், குட்டை திடலில் விளையாட்டு சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குழந்தைகள் ராட்டினம், குடை தூரி, கார், சிறுவர் ரயில் உள்ளிட்ட பல விளையாட்டு சாதனங்கள், மரணக்கிணறு, "டாக் ஷோ, மேஜிக் ஷோ, கன் சூட் உள்ளிட்ட கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதுதவிர, கோவில் வீதியில் பலவிதமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று முதலே, விளையாட்டு சாதனங்களை இயக்க திட்டமிட்டு, பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !