உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை!

திரவுபதியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை!

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு நடந்த ஊஞ்சல் சேவையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தி ருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.  தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், மகாபாரத சொற்பொழிவு, இரவு, நாடகமும் நடந்து வருகிறது.  நேற்று முன்தினம், விழாவின்  முக்கிய நிகழ்ச்சியாக, ஊஞ்சல் சேவை நடந்தது. கோவில் வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஊஞ்சலில், உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு  அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு தீபாராதனை நடத்தி, ஊஞ்சல் சேவை நடந்தது. இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !