மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் ஆன்மிக ஊர்வலம்!
ADDED :3843 days ago
மந்தாரக்குப்பம்: பங்காரு அடிகள் பிறந்த நாளையொட்டி, மந்தாரக்குப்பம் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் ஆன்மிக ஊர்வலம் நடந் தது. மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் துவங்கிய ஊர்வலத்தை, வட்டத் தலைவர் கரலிங்கம் துவக்கி வைத்தார். கடை வீதியாக சென்ற ஊர்வலம் பெரியாக்குறிச்சி மன்றத்தில் முடிவடைந்தது. அங்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பெண்களுக்கு புடவை, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.