வைத்தீஸ்வரன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :3901 days ago
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தேவார பாடல் பெற்ற ஸ்ரீ தையல்நா யகி சமேத வைத்தியநாதர் சுவாமி கோயில் உள்ளது.நவக்கிரகங்களில் செவ்வாய் தலமான இந்த கோயி லில் பங்குனி உத்திர பெரு விழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ம் நாள் திருவி ழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் வினாயகர்,செல்ரவமுத்துக்குமர சுவாமி மற்றும் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். அங்கு அ வர்களுக்கு மகா தீபாராதனை நøபெற்றது. இதனை அடுத்து தருமபுர ஆதின கட்டளை விசாரனை திரு நாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந் துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி விழா வரும் வெள்ளி க்கிழமை நடைபெற உள்ளது.