கடம்பத்தூர் முருகன் கோவிலில் சங்காபிஷேகம்
ADDED :3842 days ago
கடம்பத்துார்: கடம்பத்துார், கடம்பவன முருகன் கோவிலில், நேற்று, 108 சங்காபிஷேகமும் நடந்தது. கடம்பத்துார் அடுத்த, ஸ்ரீதேவிகுப்பத்தில் உள்ள கடம்பவன முருகன் கோவிலில், கடந்த பிப்., 11ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, மண்டலாபிஷேக நிறைவு விழாவும், சுப்ரமணியருக்கு, சிறப்பு ஹோமும், ஐஸ்வர்ய மகாலட்சுமி ஹோமமும் நடந்தது. பின், நேற்று காலை, 11:00 மணிக்கு, கடம்பவன முருகனுக்கு, 108 சங்காபிஷேகமும், விசேஷ ஹோமமும், தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.