கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
ADDED :3842 days ago
ஒக்கியம் துரைப்பாக்கம்: கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழிங்கநல்லுார் மண்டலம், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் இருந்து கண்ணகி நகர் செல்லும் வழியில், ஆழிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. அதன் அருகே குளம் உள்ளது. பராமரிப்பு இல்லாததால், குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்தும், குப்பை நிறைந்தும் காணப்படுகிறது. நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கும், கோவில் குளத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.