உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனின் நம்பிக்கை!

இறைவனின் நம்பிக்கை!

நான் படிக்கப் போகிறேன். அடுத்த ஆண்டு சந்திப்பேன்.  எனக்குப் பணஉதவி உங்களால் செய்ய முடியுமா? என மாணவர் ஒருவர் உங்களிடம் கேட்பதாக வைத்துக் கொள்வோமே! அப்போது நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லுக்கு அல்லாஹ் விரும்பினால் என்று அர்த்தம். ஆம்... இறைவனின் விருப்பமில்லாமல் எதுவும் நடக்காது. உதவி கேட்பவரும், உதவி செய்பவரும் அதுவரையில் உயிருடன் இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும், இன்று செல்வச் செழிப்புடன் இருப்பவர் நாளையே செல்வத்தை இழக்கலாம். உதவி கேட்பவரின் படிப்பு இடையில் தடைபடலாம். எனவே அவசரப்பட்டு வாக்கு கொடுக்காதீர்கள். இறைவனின் விருப்பப்படி ஆகட்டும் என்று சொல்லுங்கள். அந்த விருப்பம் நிறைவேற்றித் தர  வேண்டுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !