உள்ளூர் செய்திகள்

கருணை மழை!

ஒருமுறை கைபர் பகுதியைச் சேர்ந்த யூதப்பெண், நபிகள் நாயகத்திற்கு ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக வழங்கினாள். நாயகமும், அவருடன் சென்ற பிஷ்ர்இப்னுவும் அதைச் சாப்பிட்டனர். சாப்பிடும் போதே, இந்த உணவில் விஷம் கலந்திருக்கிறது என நபிகள் சொன்னார். இதற்குள் பிஷ்ர்இப்னு இறந்துவிட்டார்.அந்த பெண்ணை அழைத்த நாயகம், ஏன் இப்படி செய்தாய்? எனக் கேட்டார்.அதற்கு அந்த பெண், நீர் இறைவனின் துõதர் என சொல்லி வருகிறீர். அது உண்மையாக இருந்தால் இந்த விஷ உணவு உம்மை ஏதும் செய்யாது என்று நான் நம்பினேன். அதனால் இதை உமக்குத் தந்தேன், என்றாள்.இதன் பிறகு நாயகத்தின் தோழர்கள் அந்த பெண்ணை கொன்றுவிடலாமா? எனக் கேட்டனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.தனக்கு விஷம் வைத்துக் கொல்ல முயன்றவளுக்கு கருணை காட்டிய வள்ளலாக அவர் திகழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !