உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்!

கண்டாச்சிபுரம் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்!

கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் கோவிலில் 53ம்ஆண்டு பங்குனிஉத்திரப் பெருவிழா நடந்தது. கண்டாச்சிபுரம் சக்திவேல் முருகன் கோவில் பங் குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 8:00 மணியளவில் சக்திவேல்ஊர்வலம் நடந்தது.

பின்னர் காவடிகள் அபிஷேகம், மாவு மஞ்சள் இடித்தல், மழுவு அடித்தல், மிளகாய் அபிஷேகம் ஆகியவை நடந்தது. பிற்பகலில் வேல் போட்டுக்கொள்ளுதல், காவடிகள் மற்றும் பூந்தேர் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !