உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுபாக்கம் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு!

சிறுபாக்கம் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு!

சிறுபாக்கம்: பங்குனி உத்திரத்தையொட்டி, சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதூர் பாலசுப்ரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று காலை சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

பக்தர்கள் பால்குடம், காவடி சுமந்தும், அலகு அணிந்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல், சிறுபாக்கம் முருகன் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானார் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !