உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தாரக்குப்பம் பாலமுருகன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

மந்தாரக்குப்பம் பாலமுருகன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

மந்தாரக்குப்பம்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மந்தாரக்குப்பம் பாலமுருகன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மந்தாரக்குப்பம் தேவி  மாரியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் சுவாமிக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேகம், ராஜ  அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் பட்டாடை உடுத்தி, திரு க்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, இன்று காலை பக்தர்கள் பால்குடம், மயில், இளநீர்  காவடி சுமந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !