சிவசைலநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :3841 days ago
புதுச்சேரி: அரியாங்குப்பம், சிவலிங்கபுரத்தில் உள்ள, சிவசைலநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், கடந்த 30ம் தேதியன்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு, கடம் புறப்பாடும், 9.30 மணிக்கு, கோபுர கும்பாபிஷேகம், 10 மணிக்கு, மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு, சிவசைலநாதர் சுவாமி திருவீதியுலா நடந்தது.