கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராமநவமி
திண்டிவனம்: திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ராமநவமி ஆறாவது நாள் உற்சவம் நடந்தது.திண்டிவனம் பிஆர்எஸ் நிறுவனம் சார்பில் நடந்த விழாவை முன்னிட்டு ராமர், லட்சுமணன், சீதாதேவி, ஆஞ்சனேய மூர்த்தி ஆகிய மூலவர்கள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மூலவர் சிலைகள் முத்தங்கி சேவையிலும், உற்சவ மூர்த்தி ஊஞ்சல் சேவையிலும் அருள் பாலித்தனர். சென்னை மேற்குமாம்பலம் சத்சங் ஸ்டோர் குழுவினர் சார்பில் ராம நாம சங்கீர்த்தனம் நடத்தினர். ராமசுப்ரமணிய பிரசாத், ஸ்ரீராம் பக்திபாடல்கள், பஜன் செய்தனர். ஹரிகிருஷ்ணன் ஹார்மோனியம், ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீராம் மிருதங்க கச்சேரி நடத்தினர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுரேஷ் நடத்தினர். விழா ஏற்பாடுகளை பி.ஆர்.எஸ்., நிறுவன குடும்பத்தினர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.